முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில்வே துறை தேர்வில் பந்தல்குடி மாணவர் தென்மண்டல அளவில் முதலிடம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ரெயில்வே துறையில் நடைபெற்ற தேர்வுகளில் சுரெஷ்அகாடமியில் பயின்ற அருப்புக்கோட்டை பந்தல்குடி மாணவர் தென்மண்டல அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
      தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகடாமி சார்பில் அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும், இலவச தேர்வுகளும் நடத்தப்பட்டு ஒவ்வொரு போட்டித்தேர்வுகளின்போதும் நூற்றுக்கணக்கானோர் அரசு பணியில் வேலைக்கு சேர்ந்து வருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளாக தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் இந்த சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி பயிற்சி நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் தனது கிளையை தொடங்கி பின்தங்கிய இந்த மாவட்ட மக்களை அரசு பணியில் சேர்த்து வருகின்றது. கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல்வேறு அரசு போட்டி தேர்வுகளில் மட்டும் ஆசிரியர் தேர்வில் 218 பேரையும், போலீஸ் தேர்வில் 72 பேரையும், வங்கி தேர்வில் 22 பேரையும் தேர்ச்சி பெற வைத்து இன்று அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். சுரேஷ் ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமியின் சிறப்பு அம்சங்களில் ஒன்று இந்த மையத்தில் முதல் தடவை பயிற்சியில் சேர்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வரை அனைத்து பயிற்சிகளும், புத்தகங்களும், தேர்வுகளும் இலவசம் ஆகும்.  இந்நிலையில் இந்திய ரெயில்வே துறையின் சார்பில் கடந்த ஆண்டு பல்வேறு பதவிகளுக்கான போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன.
     இந்த தேர்வுகளுக்காக சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமி சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகளும், போட்டி தேர்வுகளும் தூத்துக்குடி, ராமநாதபுரம் கிளைகளில் நடத்தப்பட்டன. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட 100 மாணவர்களில் 30 பேர் தேர்ச்சி பெற்று ரெயில்வே துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். குறிப்பாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி பகுதியை சேர்ந்த மாணவர் ஜெயபிகாஷ் என்பவர் தென்மண்டல அளவில் முதல்இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சாதனை படைத்த ஜெயபிரகாசை பாராட்டி சுரேஷ் அகாடமி நிறுவனர் சுகேஷ்சாமுவேல் பரிசு வழங்;கினார். இந்த ஆண்டிற்கான ரெயில்வே துறை தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம், தூத்துக்குடி மையங்களில் வரும் 4-ந் தேதி முதல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விபரங்களுக்கு 7550352917 மற்றும் 7550352916 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து