திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      தூத்துக்குடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு மாசித்திருவிழா வருகின்ற பிப். 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மாசித்திருவிழா

 கொடியேற்றத்தை முன்னிட்டு பிப். 20-ம் தேதி செவ்வாய்கிழமையன்று அதிகாலை 1 மணிக்கு திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,  தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் திருக்கோயில் செப்புக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. மாலையில் அருள்மிகு அப்பர் சுவாமிகள் திருக்கோவிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.       திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப். 24-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பிப். 25-ம் தேதி ஆறாம் திருவிழாவன்று காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வரும். பிப். 26-ம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5.00 மணிக்கு முதல் 5.30 மணிக்குள் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்;, அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பிப். 27-ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோவில் வந்;து அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று பகல் 11.30 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் சேர்கிறார். பிப்ரவரி 28-ம் தேதி புதன்கிழமையன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி; தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக்கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பத்தாம் திருவிழா மார்ச் 1-ம் தேதி காலை 5.30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. பிள்ளையார் ரதம்;, சுவாமி தேர், அம்மன் தேர்கள் திரு வீதி வலம் வந்து நிலை சேர்கிறது. மார்ச் 2-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு சுவாமி மாலையில் யாதவர் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி எழுந்தருளி இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி மண்டபத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தெப்பத்தில் எழுந்தருளி  11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 3-ம் தேதி 12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் பா.பாரதி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ.நாராயணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து