காவிரி நதி நீர் இறுதி தீர்ப்பு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி தீர்ப்பு

காவிரி நதி நீர் குறித்த உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பை புதுவை அரசு வரவேற்கிறது. தீர்ப்பில் காரைக்காலுக்கு 7 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது காரைக்கால் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். மேலும் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியை தரும் செய்தி ஆகும். இதன்படி காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து மத்திய அரசு உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும். காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய இந்த தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி காரைக்காலுக்கு வந்து சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து