முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதா? தி.மு.க.வுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பை முழுவதும் படித்துப் பார்த்த பிறகே அரசு சார்பில் கருத்து தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எனினும் காவிரி மேலாண்மை வாரியம், கண்காணிப்புக் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை வரவேற்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.  மேலும் விமர்சனம் செய்யும் தி.மு.க.வுக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

படித்துப் பார்த்து...
சென்னையில் நேற்று முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: -
காவிரி வழக்கில் கிட்டத்தட்ட 400 பக்கங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை முழுவதும் படித்துப் பார்த்து விட்டுத் தான் அ.தி.மு.க அரசு முழு கருத்தை சொல்ல முடியும். ஊடகங்கள் வாயிலாக அறிந்த செய்தியின் படி காவிரி மேலாண்மை வாரியமும், கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதும் ஒரு நல்ல விஷயம், வரவேற்கத்தக்கது. 205 டி.எம்.சி நீர் நம்முடைய ஜீவாதார உரிமை, 1991 முதல் 96 வரையில் இந்த நீரை பெறுவதற்காக 72 மணி நேரம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த மாபெரும் முதல்வர் ஜெயலலிதா. அன்று அவர் வைத்த கோரிக்கைகள் 3. எந்த வகையிலும் 205 டி.எம்.சி நீரை குறைக்கக் கூடாது. 205 டிஎம்சி நீரை தமிழ்நாடு டெல்டா மாவட்ட விவசாயிகள் பெற வசதியாக காவிரி மேலாண்மை வாரியம், கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வரவேற்கத்தக்க விஷயம்
இன்று (நேற்று) அது அமைக்கப்பட்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை, கிடைத்ததும் அது குறித்து கருத்து சொல்வோம். ஆனால் வருத்தமளிக்கும் விஷயம். நமக்கு 14.75 டி.எம்.சி நீர் குறைந்திருக்கிறது. தீர்ப்பை முழுவதும் நாங்கள் பார்க்கவில்லை, அதிகாரப்பூர்வமாக இன்னும் அரசுக்கு தெரியவில்லை. காவிரியை பொறுத்த வரை ஜெயலலிதாவும், ஜெயலலிதா வழியில் அரசை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வர் பழனிசாமியும் அழுத்தமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்கள். காவிரி தங்களுக்குத் தான் உரிமை என்று சொன்ன கர்நாடகாவிற்கு காவிரியில் யாரும் உரிமை கொண்டாடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருப்பதும் வரவேற்கத்தக்க விஷயம்.

தி.மு.க.வுக்கு கண்டனம்
காவிரி நீர் விவகாரத்தில் வாதங்களை எந்த அளவிற்கு அழுத்தமாக முன் எடுத்து வைத்திருக்கிறோம் என்பது விவசாயிகள், மக்களுக்கு தெரியும். அதற்கு மாறாக தி.மு.க , இந்த அரசு மீது விமர்சனம் வைப்பது என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஷயம் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து