முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவம்: துணிவுடன் குழந்தைகளை காப்பாற்றிய இந்திய ஆசிரியை

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, இந்திய வம்சாவளி ஆசிரியை ஒருவர் துணிவுடன் செயல்பட்டு ஏராளமான குழந்தைகளை காப்பாற்றியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவின் பார்க்லாண்டில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நிகோலஸ் க்ரூஸ் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில், 17 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிகோலஸ் க்ரூஸை கைது போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்த பள்ளியில் பெருமளவு இந்திய வம்சாவளி குழந்தைகள் அதிகஅளவில் படிக்கின்றனர். அதுபோலவே அங்கு இந்திய வம்சாவளி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் சாந்தி விஸ்வநாதன்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது, சாந்தி விஸ்வநாதன் தனது வகுப்பறையில் அல்ஜூப்ரா வகுப்பு நடத்திக் கொண்டு இருந்தார். அப்போது முன்னாள் மாணவன் பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்தினார். இதையடுத்து பள்ளியின் அபாய மணி இரண்டுமுறை ஒலித்தது. அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்து கொண்ட ஆசிரியர் சாந்தி விஸ்வநாதன் வேகமாக சென்று வகுப்பறையின் கதவை உட்புறமாக தாழிட்டார்.

ஜன்னல் கதவுகளையும் மூடி யாரும் உள்ளே வர முடியாதவாறு தடுத்துள்ளார். மேலும், மாணவ, மாணவியரை குப்புறப்படுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் மாணவர் அடுத்தடுத்து வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த வகுப்பறை கதவு மூடப்பட்டு இருந்ததால், அந்த நபரால் உள்ளே வர முடியவில்லை.

பள்ளி முழுவதும் பெரும் பதற்றத்துடன் மாணவ, மாணவியரும், ஆசிரியரும் உயிருக்கு பயந்து ஓடிய நிலையில், சாந்தி விஸ்வநாதன், பதற்றப்படாமல், வகுப்பறையை திறக்கவில்லை. இந்த துப்பாக்கிசூடு முடிந்து அதிரடிப்படை போலீஸார் உள்ளே வந்து ஒவ்வாரு வகுப்பறையாக வந்து மாணவர்களை மீட்டனர். அப்போது ஒரே ஓரு வகுப்பறையின் கதவு மட்டும் மூடியிருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தனர்.

உடனடியாக அந்த அறையின் கதவை தட்டினர். உள்ளே தாக்குதல் நடத்திய நபர் பதுங்கி இருக்க கூடும் என போலீஸார் சந்தேகம் அடைந்தனர். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தும் நபர் வகுப்பறைக்குள் வருவதற்காக தட்டுவதசாக ஆசிரியர் சாந்தி எண்ணியுள்ளார். இதனால் அவர் கதவை திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே வரவா என அவர்கள் கேட்ட பிறகும், சாந்தி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

குழந்தைகளை பாதுகாத்துக் கொண்டு தான் உள்ளே இருப்பதை கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் கதவை உடைக்காமல் ஜன்னல் கதவை மட்டும் உடைத்து வந்திருப்பது போலீஸ் என்பதை உறுதி செய்தனர். அதன் பிறகே ஆசிரியர் சாந்தி கதவை திறந்து போலீஸார் உள்ளே வர வழி விட்டுள்ளார். அதன் பிறகு போலீஸார் வந்து குழந்தைகளையும், ஆசிரியர்களையும் பத்திரமாக அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆசிரியை சாந்தியை பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டி வருகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று ஆசிரியை சாந்திக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து