முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் மெத்தனமாக உள்ளது அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் அரசு முறையாக செயல்படுத்தாமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவது உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித் துள்ளது.

பாரீஸில் நடைபெறவுள்ள தீவிரவாதத்துக்கு எதிரான நிதி செயல்திட்ட மாநாட்டில், பாகிஸ்தான் மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவி வரும் சூழலில், அமெரிக்கா இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஹேதர் நெளரெட், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக தீவிரவாதம் வளர்ந்து வரும் நிலையில், அதனை ஒழிக்க பல நாடுகள் உறுதிபூண்டுள்ளன. தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமெனில், முதலில் பயங்கரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதி ஆதாரத்தை தடுப்பது அவசியம். இதற்காகதான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அதேபோல், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை களையும் பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுத்தி வருகின்றன.

ஆனால், இந்த இரண்டு விஷயங்களைச் செயல்படுத்துவதில் பாகிஸ்தான் மிகுந்த அலட்சியம் காட்டி வருகிறது. இது, உலக நாடுகள் அனைத்தையும் மிகவும் கவலையடையச் செய்துள்ளது. இவ்வாறு ஹேதர் நெளரெட் தெரிவித்தார்.

தீவிரவாத ஒழிப்பு விஷயத்தில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து