முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரவ் மோடி மோசடி விவகாரத்தில் காங்கிரசுக்கு முக்கிய பங்கு உள்ளது - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடிக்கு வைர வியாபாரி நீரவ் மோடி மோசடி செய்த விவகாரத்தில், காங்கிரசுக்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

இது கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பஞ்சாப் நேஷனல் வங்கி, நீரவ் மோடி இடையிலான கூட்டு தொடங்கியுள்ளது. வழக்கம்போல் தனது சுயலாபத்துக்காக காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஊழல் முறையை கட்டவிழ்த்துள்ளது. - நிர்மலா சீதாராமன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியில் காங்கிரசுக்கு முக்கிய பங்கு உள்ளது. இது கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பஞ்சாப் நேஷனல் வங்கி, நீரவ் மோடி இடையிலான கூட்டு தொடங்கியுள்ளது. அப்போது வழக்கம்போல் தனது சுயலாபத்துக்காக காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஊழல் முறையை கட்டவிழ்த்துள்ளது.

ஆனால் பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் அவர்கள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மோசடிகளை மறைக்கத் தொடங்கியது. ஆனால், மோடி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து ஊழலை ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. எனவே தற்போது இவ்விவகாரம் தெரியவந்துள்ளது. எனவே தங்கள் மீதான குற்றத்தை மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தற்போது பழியை பா.ஜ.க மீது திருப்பியுள்ளது. தொடர்ச்சியாக பொய் கூறி மக்களை திசை திருப்பும் செயல்களை காங்கிரஸ் தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்கள் மீதான இந்த ஊழல் மோசடிகளின் உண்மை தன்மையை காங்கிரஸ் உணரத் தவறிவிட்டது.

நீரவ் மோடியின் பையர் ஸ்டார் வைர வியாபார நிறுவனத்தில் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மணு சிங்கவியின் மனைவி அனிதா, நிர்வாக இயக்குநராக உள்ள அத்வைத் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த 2002 முதல் பங்குதாரராக செயல்பட்டு வருகிறது. கீதாஞ்சலி குழுமத்தின் மறைமுக பங்குதாரராக காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்த மோசடி அனைத்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நடைபெற்றது. தற்போது நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ முழு சுதந்திரத்துடன் நேர்மையாகச் செயல்படுகிறது. எனவேதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து