முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம்

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலி தான் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

வரலாற்று சாதனை...

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி போட்டிகள் கொண்ட 6 ஒருநாள் தொடரில் விளையாடியது. ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

மிகவும் சிறப்பானது

இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-

டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் பின் தங்கி இருந்தோம். 3-வது டெஸ்டில் பெற்ற வெற்றி புத்துயிர் அளித்தது. அதே உத்வேகத்துடன் விளையாடி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. மிகவும் சிறப்பானது. கடந்த 2 வாரங்களாக வீரர்கள் அபாரமாக விளையாடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கோலியைதான் சேரும்...

இதற்கான அனைத்து பாராட்டுகளும் அணியின் தலைவரான விராட் கோலியை தான் சாரும். ஏனென்றால் அவர்தான் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

விராட்கோலியிடம் இருந்த தீவிரமே அணியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரிடம் இருக்கும் திறமையால் அவர் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளார். தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலிதான்.

குல்தீப் - சாஹல்...

மிடில் ஓவரில் சுழற்பந்து வீரர்களான சாஹல், குல்தீப் சிறப்பாக செயல்பட்டனர். இருவரும் மிகவும் அபாரமாக பந்து வீசி தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கோலியின் சாதனையை புகழ ஆக்ஸ்ஃபோர்டு புதிய அகராதி தேவை: ரவி சாஸ்திரி
Web Team
Published On: 17 Feb, 2018 05:00 PM
Last Updated On: 17 Feb, 2018 05:02 PM

விராட் கோலியின் சாதனைகளை பற்றி பேச வேண்டும் என்றால் லேட்டஸ் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி வாங்கி அதில்தான் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி,  5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதில் விராட் கோலி அபார சதம் அடித்தார். இது அவருக்கு 35 வது சதம் ஆகும். இந்தத் தொடரில் அவருக்கு இது 3 வது சதம். இதன் மூலம், இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் 3 சதங்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற சிறப்பை விராட் பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில், குறைவான போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் கோலி நிகழ்த்தினார். இந்தத் தொடரில் 6 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து 558 ரன்கள் குவித்தன் மூலம், இரு அணிகள் இடையிலான தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய சாதனையையும் விராட் கோலி படைத்தார்.

 

இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசும்போது, “விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலை பற்றி பேச வார்த்தைகளே இல்லை. விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைல் குறித்து ஒருவர் புகழ்ந்து பேச வேண்டும் என்றால் அதற்கு புத்தகக் கடைக்கு சென்று லேட்டஸ்ட் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியை வாங்கி அதில்தான் வார்த்தைகளை தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டும்”என்றார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ரவி சாஸ்திரி, நான் உங்கள் இடத்தில் இருந்தால் நாளைக்கு இதனை செய்வேன் என்றும் கூறினார். விராட் கோலி தான் உலகிலேயே தலைசிறந்த பேட்ஸ்மேன் என சாதாரணமாக தன்னால் கூறமுடியும் என்றும் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து