முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிகாந்த் உருவ பொம்மை எரிப்பு

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      சினிமா
Image Unavailable

பெங்களூர் : காவிரி நீர் குறித்து தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதா என்று கர்நாடகாவில் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

ஆதரவாக ...

காவிரி மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அரசியலில் ஈடுபடத் தொடங்கி உள்ள நடிகர் ரஜினி காந்த், இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றார். தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

உருவ பொம்மை...

கன்னட ரட்சிக வேதிக அமைப்பினர் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் சென்னப்பட்னாவில் இந்த போராட்டம் நடந்தது. அப்போது அவர்கள் ரஜினிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதா எனக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து