முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நாட்களாக நீடித்த டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ்

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கடந்த 5 நாட்களாக நடந்து வந்த டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று திரும்பப் பெறப்பட்டது. டெண்டர் விடுவதில் மாற்றம் செய்வதாக எண்ணெய் நிறுவனங்கள் அளித்த உறுதி மொழியை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம்

நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தென்மண்டல லாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் உறுதி மொழியை ஏற்று, போராட்டத்தைத் திரும்பப் பெறுவது என்ற முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு எடுத்துச் செல்ல மண்டல வாரியாக ஒப்பந்தம் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்று போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பணிகள் பாதிப்பு...

மாநில அளவில் டெண்டர், லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 12ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில், தென்மண்டலத்தைச் சேர்ந்த 4,500 எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. வேலை நிறுத்தத்தால் தினசரி 13 ஆயிரம் டன் எரிவாயு எடுத்துச் செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டன. எரிவாயு எடுத்துச் செல்லும் பணி நின்றதால், 15 லட்சம் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் டெண்டர் விவகாரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் அளித்த உறுதியின்பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. எங்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணெய் நிறுவனங்கள் முன்வந்ததை அடுத்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். லாரிகள் உடனடியாக இயக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து