முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து 66 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

டெஹ்ரான்: ஈரானில் டெஹ்ரானிலிருந்து யாசூஜ் என்ற இடத்துக்குச் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 66 பயணிகளும் பலியாகியுள்ளனர்.  இந்த விமானம் ஸாக்ரோஸ் மலைகளில் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரியவருகிறது.

ஈரானின் டெஹ்ரான் நகரில் இருந்து யாசுஜ் நகருக்கு உள்நாட்டு நேரப்படி நேற்று காலை 5 மணிக்கு, ஏஸ்மேன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஆர் 72 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 66 பயணிகளும், விமான ஊழியர்களும் பயணித்தனர்.

விமானம் புறப்பட்டு, ஈரானின் இஸ்பாஹன் மாநிலத்தில் உள்ள செமிரோம் மலைப்பகுதிக்குள் சென்றபோது, ரேடாரின் கட்டுப்பாட்டில் இருந்து விமானம் விலகியது. அதன்பின் நீண்டநேரமாகியும், விமானத்தின் சமிக்ஞை ரேடாருக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து, அங்கு மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டதில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முற்போட்டபோது, மலையில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து மீட்புப்பணிக்காக ஹெல்காப்டர்களை ஈரான் அரசு அனுப்பிவைத்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான பகுதி அடர்ந்த வனப்பகுதி, மலைப்பாங்கான பகுதி என்பதால், அங்கு ஆம்புலெனஸ்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், கூடுதலாக ஹெலிகாப்டர்களை அனுப்ப ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து