முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தலின்போது 13 ரஷ்யர்கள் தலையீடு: அமெரிக்கா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் 13 ரஷ்யர்கள் தலையிட்டு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷ்யாவைச் சேர்ந்த இணைய தளங்கள், பத்திரிகைகள் மற்றும் சில நிறுவனங்கள் விளம்பரங்கள் மற் றும் செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க தேர்தலில் 13 ரஷ்யர்களின் தலையீடு இருந்தது. அத்துடன் 3 ரஷ்ய நிறுவனங்களும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளன என்று விசாரணை குழுவின் சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் முல்லர் குற்றம் சாட்டி உள்ளார். இத்தகவலை அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளதாக சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டுள் ளது. அமெரிக்காவுக்கு எதி ராக ‘தகவல் போர்’ நடத்தியதாக ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 13 ரஷ்யர்களும் தங்களை அமெரிக்கர்கள் என்று போலியாகக் கூறிக் கொண்டு சமூக வலைதளங்கள் மூலமாக அமெரிக்க மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து தவறான கருத்துகளை பரப்பி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து