முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெறும் கைகளால் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த பாரதீய ஜனதா எம்.பி. : பொதுமக்களின் பாராட்டு குவிகிறது

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

போபால் :  வெறும் கைகளால் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த மத்திய பிரதேச மாநில பாரதிய ஜனதா எம்.பிக்கு பொதுமக்களின் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதியின் எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா. இவர் தனது தொகுதிக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது காஜூஹா என்ற கிராமத்தில் தூய்மைப் பணியில் தொண்டர்களுடன் ஈடுபட்டார். அப்போது கிராம தொடக்கப் பள்ளிக்கு சென்ற ஜனார்தன் மிஸ்ரா, அங்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவறைக்கு சென்றார். கழிவறை கோப்பையில் பயப்படுத்தப்படாத காரணத்தினால் அது சேறும் சகதியும் நிரம்பி காணப்பட்டது.

சற்றும் யோசிக்காத ஜனார்தன் மிஸ்ரா உடனடியாக தூய்மைப் பணியில் இறங்கினார். அங்கு இருந்த சேற்றை வெறும் கைகளால் அள்ளி சுத்தம் செய்தார். அவர் கழிவறையை சுத்தம் செய்த விடியோ காட்சி சமுக வலைத்தளங்களால் வைரலாகப் பரவியது. 

ஜனார்தன் மிஸ்ராவின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் கழிவுவரை சுத்தம் செய்த பொழுது மிஸ்ரா தகுந்த உபகரணங்களை பயன்படுத்தி இருக்கலாம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து