முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் பொன்னுசாமி, அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 15 ஆண்டுகள் இருந்த பொன்னுசாமி, கடந்த 1999-2001 ஆண்டுகளில் மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு பா.ம.கவிலிருந்து விலகி கடந்த ஆண்டு அ.தி.மு.கவில் இணைந்தார்.

இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பொன்னுசாமி அக்கட்சியில் இணைந்தார். அப்போது மத்திய இணையமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன், பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பொன்னுசாமி கூறியதாவது, கல்லூரித் தோழரும் பா.ம.க நிறுவனருமான ராமதாஸின் விருப்பத்தின் பேரில் முதன் முதலாக சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை இணையமைச்சராக இருந்தேன். 10 ஆண்டு காலம் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்காக என்னால் முடிந்த பணியை ஆற்றினேன்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பா.ம.கவில் இருந்து விலகினேன். இந்நிலையில், பா.ஜ.கவுக்கு வர வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் அழைத்ததன் பேரில் அக்கட்சியில் இணைந்துள்ளேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து