முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. இடைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்: அகிலேஷ்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ :  உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் யோகி ஆதித்யநாத் அரசோ, அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். --------- அகிலேஷ் யாதவ்

மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு தனது எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் கோரக்பூர் மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதே போன்று துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெவுரியாவும் எம்.பி. பதவியைத் துறந்ததால் பூல்பூர் தொகுதியும் காலியானது. இதையடுத்து, அவ்விரு தொகுதிகளுக்கும் அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் அத்தொகுதிகளுக்கு டாக்டர் சரிதா, மணீஷ் மிஸ்ரா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் சமாஜவாதி, பா.ஜ.க ஆகிய கட்சிகளின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் மாநிலத் தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது,

இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை சமாஜவாதி கட்சி விரைவில் வெளியிடும். மத்தியில் பா.ஜ.க அரசு 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்து விட்டது. அதேபோன்று மாநில சட்டப் பேரவையில் 2 முறை பட்ஜெட் தாக்கலாகி விட்டது. இருப்பினும், உத்தரப் பிரதேச மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் மத்திய, மாநில பா.ஜ.க அரசுகள் முறையாக நிறைவேற்றவில்லை.

மாநில விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அதைத் தடுக்க வேண்டிய யோகி ஆதித்யநாத் அரசோ, அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து