முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் நாட்டியாஞ்சலி நிறைவு விழா ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      கடலூர்
Image Unavailable

தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோகித்  சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோவிலில் ‘நாட்டியாஞ்சலி’ நிறைவு விழாவில்  பங்கேற்று சிறப்புரையாற்றினார் அப்போது அவர் தெரிவித்ததாவது.

நாட்டியாஞ்சலி’நிறைவு

சிதம்பர நடராஜரின் பக்தனாகிய நான் நாட்டியாஞ்சலி நிறைவு விழாவில் பங்கு கொள்ளுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நாட்டியாஞ்சலி குறித்து கூறும்போது மகாசிவராத்திரியின்போது நடராஜர் பெருநடனம் புரிவார் அதனாலேயே பக்தர்களும் தங்களது காணிக்கையையும் நடனமாகவே செலுத்துகின்றனர். அதனாலேயே இந்நிகழ்ச்சி நாட்டியாஞ்சலி என பெயர் பெற்றது என தெரிவித்தார்.  நாட்டியாஞ்சலியின்போது இந்தியாவின் ஆறு சிறந்த நடன வடிவங்களான பரதம், குச்சிப்புடி, கதக்களி, கதக், ஒடிசி, மணிப்பூரி ஆகியன மூலம் நடராஜருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நடன கலைஞர்கள் இவ்விழாவில் பங்கு கொள்ளுகின்றனனர். சிவபெருமான் இங்கு நடராஜராக காட்சிதருகிறார் என்றும், பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, வாயு, நீர், நிலம் ஆகியவற்றில் ஆகாயத்திற்கான ஸ்தலமாக சிதம்பரம் விளங்குகிறது என்றும் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோவில் பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் கடந்து விளங்குகிறது என்றும், அறிவியல் பூர்வமாக மனித உடலமைப்பை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கைக்கு இணையாக இங்குள்ள கோபுரத்தில் 21,600 தங்க ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளது என்றும், உடலிலுள்ள 9 வாசல்களுக்கு இணையாக 9 கலசங்களை கொண்டுள்ளதென்றும், இங்குள்ள கனகசபை, சுவாச மண்டலம், நரம்பு மண்டலம் மற்றும் பிற உறுப்புகளுக்கு ஒப்பாக விளங்குகிறது என்றும், அளப்பரிய நாட்டியம் உயிர் உடம்பிலுள்ள இதயத் துடிப்பிற்கு சமமானது என்றும், இங்குள்ள கோவில் பேரிண்பத்தின் ஒரு மாதிரியாக விளங்குகிறது என்றும் தெரிவித்தார். உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனிசிறப்பு இருக்கும் இந்தியாவின் தனிச்சிறப்பு ஆன்மீகம். குறிப்பாக பரதக்கலை ஆடுபவரையும் பார்வையாளர்களையும் இறை நிலையோடு ஒருங்கிணைப்பது சிறந்த ஆன்மீகக் கலையே ஆகும்.  இந்திய நாகரீகத்திற்கு ஒரு மனிதனை உயர்ந்த சிந்தனையாளராக மாற்றும் திறன் உண்டு. இதனாலேயே பல ஆன்மீக வாதிகளும், தத்துவஞானிகளையும் நம் நாடு கொண்டுள்ளது. இந்திய பண்பாட்டினையும், நாகரீகத்தினையும் ஊக்குவிக்கும் இந்நாட்டியாஞ்சலி விழாவினை சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருடம் தவறாமல் நடத்தி வரும் விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.முன்னதாக அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில்  தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோகித்  பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து