நாகப்பட்டினம் நகராட்சி அவுரித்திடலில் தூய்மை பணி : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      நாகப்பட்டினம்
pro nagai

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாகப்பட்டினம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் இன்று (18.02.2018) தூய்மைபாரத இயக்கத்தின் கீழ் துய்மைப் பணியைத் துவக்கி வைத்தும், சிறப்பு இரத்ததான முகாமினைத் துவக்கி வைத்தும், நாகப்பட்டினம் நகராட்சி அவுரித்திடலில் தூய்மைபாரத இயக்கத்தின் கீழ் துய்மைப் பணியைத் துவக்கி வைத்து, "தூய்மையே சேவை" சுகாதார விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். தூய்மைப் பணியாளர்களிடம் சுகாதார பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

சுகாதார விழிப்புணர்வு

 மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் பாரத சாரண சாரணியரிடம் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். மேலும், ‘முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம்"; என்ற உறுதிமொழியை தமிழக ஆளுநர் வாசிக்க, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர், ஆளுநரின்; கூடுதல் தலைமைச் செயலாளர், மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழவினர், அனைத்து துறை அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும், சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த காட்சி அரங்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட காட்சி அரங்;கு, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி ஆகியவற்றை தமிழக ஆளுநர் பார்வையிட்டார். பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் திடக்கழிவு உரக்கிடங்கில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைப்; பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். நாகப்பட்டினம் பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையினை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் குறித்தும் அரிசியின் விலை மற்றும் வெளிச்சந்தை விலை குறித்தும் ஸ்மார்ட் கார்டு மூலம் நியாயவிலைக் கடையில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

நாகப்பட்டினம் அரசு சுற்றுலா மாளிகையில், பல்வேறு துறை அலுவலர்களுடன் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்;ந்து பொதுமக்களிடம் 56 மனுக்களை தமிழக ஆளுநர் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் , ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், .கா.., மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அ.சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து