ஆர்.வி.எஸ் கல்லூரியில் இரத்த தான முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      திருவள்ளூர்

 

யூத் ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு திருவள்ளுர் மாவட்டம் ஆர்.வி.எஸ். பத்மாவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் திருவள்ளுர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் குழும தலைவர் சுதீர் லோதா வழிகாட்டுதலுடன் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இரத்ததானம்

கல்லூரி முதல்வர் வெங்கடமுனி,திருவள்ளுர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் தமிழ்செல்வி,இந்தியன் ரெட் கிராஸ் குழும செயலாளர் பி.ஆர்.நாகேந்திரன் முன்னிலையில் முகாம் நடைபெற்றது.இரத்த தான முகாமில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்.

முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் குழும அம்பத்தூர் வட்ட செயலாளர் நாகராஜ்,ஊத்துக்கோட்டை வட்ட செயலாளர்(பொ)ஏழுமலை,ஆவடி வட்ட செயலாளர்(பொ)தன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து