முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகால் அழகில் மயங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

ஆக்ரா : உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலின் அழகில் கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ மயங்கினார்.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் ஒரு வார கால சுற்றுப்பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் நேற்று இந்தியா வந்தார். அவருடன் அவரது மனைவி சோபி கிரெகோயிர், 3 குழந்தைகளும் வந்துள்ளனர். இந்தியா வந்ததும், அவர் தனது சுற்றுப்பயணத்தை ஆக்ராவில் நேற்று தொடங்கினார்.

2015-ல் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அவர் முதன்முதலாக இந்தியா வந்துள்ளார்.

தாஜ்மகாலுக்கு வந்த அவர், அந்த நினைவுச்சின்னத்தின் அழகிலும் பொலிவிலும் மயங்கினார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நினைவுச் சின்னத்தைச் சுற்றிப் பார்த்த அவர் அங்குள்ள காதலர்கள் பெஞ்சில் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

பின்னர் அவர் மதுராவின் சுர்முரா பகுதியில் அமைந்துள்ள வனவாழ்வு சரணாலயத்துக்குச் சென்றார். கனட பிரதமரின் வருகையையொட்டி 2 மணி நேரத்துக்கு சரணாலயத்துக்குள் பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இரு நாட்டு உறவுகள் மேம்படுதல், வர்த்தகத்தை அதிகரித்தல், இந்தியாவில் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியுடன், பிரதமர் ஜஸ்டின் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதன்கிழமை அவர் பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் செல்லவுள்ளார். 2016-ம் ஆண்டில் இந்தியா-கனடா நாடுகளிடையேயான வர்த்தகம் 800 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து