முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர்கள் மூலம் வாராக் கடன் ரூ.15 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.25 லட்சத்துக்கு அதிகமாக கடன் பெற்று, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் தொழிலதிபர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்து, ரூ.14 ஆயிரத்து 593 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தத் தொகை ரூ.25 லட்சத்துக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் கடன் நிலுவை மட்டுமே, அதற்கு குறைவாக கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் கடன் தொகை குறித்து அந்த வங்கி இன்னும் வெளியிடவில்லை.

2018ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை ரூ. 25 லட்சத்துக்கு அதிகமாக கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களின் ஒட்டுமொத்த கடன் ரூ.14 ஆயிரத்து 593. 16 கோடி என்று அந்த வங்கி தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஜுன் மாதம் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.11ஆயிரத்து 879.74 கோடி மட்டுமே வாராக்கடன் இருந்த நிலையில், அடுத்த 8 மாதங்களில் ஏறக்குறைய ரூ.3 ஆயிரம் கோடி அதாவது, 23 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

124 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.11 ஆயிரத்து 400 கோடி மோசடி செய்தது தெரியவந்ததற்கு பின் வங்கியின் கடன் நிலுவைத் தொகை குறித்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்த வங்கியில் நடந்துள்ள மோசடிக்கு வங்கியில் பணியாற்றும் அதிகாரிகள் பலர் துணையாக இருந்தது இப்போது தெரியவந்துள்ளது.

இந்த வாராக் கடனில் அதிகபட்சமாக, ஃபாரெவர் ப்ரீசியஸ் ஜூவல்லரி அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் ரூ.747.97 கோடி கடன் நிலுவையாக இருக்கிறது. மேலும், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைனஸ் ரூ.597.44 கோடி, ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.410.18 கோடி, எம்பிஎஸ் ஜூவல்லர்ஸ் ரூ.266.16 கோடி என கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இதற்கிடையே வங்கியின் வாராக்கடன் அல்லது மோசமான கடன் நிலுவைத்தொகை, நடப்பு நிதி ஆண்டின், கடந்த டிசம்பர் மாதத்தும் முடிந்த காலாண்டில், ரூ.34 ஆயிரத்து 76 கோடியாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கணக்கிடும்போது, ரூ.57 ஆயிரத்து 519 கோடியாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து