முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை: செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

செங்கல்பட்டு, போரூர் சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொடூர குற்றவாளியான தஷ்வந்த் மீதான தீர்ப்பு 19-ம் தேதி வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு அறிவித்திருந்தார்.  இதைதொடர்ந்து தீர்ப்பு வெளியாவதை அடுத்து தஷ்வந்தை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

கடந்த முறை பொதுமக்கள், மாதர் அமைப்பினர் தஷ்வந்தை தாக்கியதால் தீர்ப்பு வெளியாவதை அடுத்து நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மதியம் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டது.

ஹாசினியின் தந்தை உயர்ந்தப்பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் 3 மணிக்கு தீர்ப்பை வாசித்த நீதிபதி வேல்முருகன் தனது தீர்ப்பில் தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து அவரை குற்றவாளி என அறிவித்தார். பின்னர் தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்குவதாக அறிவித்தார். இந்த வழக்கிலும் இதுபோன்ற தண்டனை வழங்காவிட்டால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்று கூறிய நீதிபதி டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, சென்னையை அடுத்த போரூரில் வசித்த தஷ்வந்த், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 7 வயது சிறுமி ஹாசினியை, கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றார். சிறுமி உடலை மறைத்து வைத்துவிட்டு குழந்தையின் பெற்றோருடன் சேர்ந்து தானும் நல்லவன் போல் நடித்து தேடும் பணியில் ஈடுபட்டார். பின்னர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அவரது நடத்தையில் சந்தேகமடைந்து போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியபோது தஷ்வந்த் கொலை செய்ததும், சிறுமி உடலை மறைக்க சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச்சென்று எரித்ததும் தெரியவந்தது. தஷ்வந்த் தனது கொடூரமான செயலால் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.

தஷ்வந்த்தை கைது செய்த போலீஸார், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். ஆனால் 3 மாதங்களுக்குள் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், தஷ்வந்த் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், அவரை ஜாமீனில் விடுவித்தது. சிறுமியின் கொலைக்குப் பின்னர் அவமானம் அடைந்த தஷ்வந்தின் பெற்றோர் குன்றத்தூருக்கு தங்கள் வீட்டை மாற்றினர். அங்கு வசித்தபோதுதான் தன் தாயாரையே தஷ்வந்த் கொலை செய்தார்.  இந்நிலையில் நேற்று ஹாசினி கொலை வழக்கில் மட்டுமே தற்போது தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரது தாயை கொலை செய்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால் அதன் தீர்ப்பு விசாரணை முடிந்து தனியாக வரும். இந்நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்த் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டான்.

தூக்கு மட்டும் அல்ல - 46 வருடங்கள்  சிறை தண்டனையும் விதிப்பு

தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த சிறுமி ஹாசினி கொலை வழக்கில் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் தஷ்வந்திற்கு மரண தண்டனையும் 46 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

அதாவது ஆள் கடத்தலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, பாலியல் வன்கொடுமைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மானபங்கம் குற்றத்திற்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், தடயங்களை மறைக்க முயன்றதற்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டத்தின்கீழ் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 46 வருடங்கள் சிறை மற்றும் மரண தண்டனை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து