முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்டரி பஸ் தயாரிக்கும் சீன நிறுவனம்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

ஆட்டோமொபைல் துறை இப்போது பேட்டரி வாகனத் தயாரிப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பொது போக்குவரத்தில் அதிகம் பயன்படும் பஸ்கள் தயாரிப்பிலும் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன. தற்போது சீனாவைச் சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் பேட்டரி பஸ்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் பேட்டரி பஸ்களைத் தயாரிப்பதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த கோல்டு ஸ்டோன் குழுமத்துடன் பிஒய்டி நிறுவனம் இணைந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து ரூ. 200 கோடி முதலீட்டில் வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன. கர்நாடக மாநிலம் பிடார் தொழில் பேட்டையில் 100 ஏக்கர் பரப்பளவில் இப்புதிய ஆலை உருவாகி வருவதாக கோல்டு ஸ்டோன் இன்பிராடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.கே.ராவல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து