முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 போட்டி: வீரர்களின் கூட்டு முயற்சியால் வென்றோம் - கோலி புகழாரம்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

203 ரன்கள் குவிப்பு...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. தொடக்க வீரர் தவான் 39 பந்தில் 72 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

28 ரன் வித்தியாசத்தில்...

பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹென்ட்ரிக்ஸ் அதிகபட்சமாக 50 பந்தில் 70 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர), பெகருதீன் 39 ரன்னும் எடுத்தனர். புவனேஷ்வர் குமார் 24 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஜெய்தேவ், ஹர்த்திக் பாண்டியா, சஹால் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

கூட்டு முயற்சியால்...

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றியை பெற்றோம். பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் ஒருங்கிணைந்து சமபலத்துடன் செயல்பட்டனர். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. தவானும், ரோகித்தும் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். அணியின் ஓட்டு மொத்த பேட்டிங் செயல்பாடு நன்றாக இருந்தது.

காயம் பெரிதாக ...

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவரது அனுபவம் உதவியாக இருந்தது. ஒட்டுமொத்த வீரர்களின் ஆட்டமும் நன்றாக இருந்தது. நான் பேட்டிங்கில் ஒரு ரன் எடுக்க ஓடியபோது காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக காயம் பெரிதாக இல்லை. தசை நார் கிழிந்து விடக்கூடாது என்பதற்காக சிறிது நேரம் ஓய்வு எடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

மிகுந்த ஏமாற்றம்...

தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுமினி கூறும்போது, “இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. முதல் 6 ஓவரில் நாங்கள் விக்கெட்டை இழந்தோம்” என்றார். இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் செஞ்சூரியனில் நாளை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து