முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதி ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பிரதமர் தயக்கம்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி தயக்கம் காட்டுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீது, பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருகிறார். அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பாகிஸ்தான் வெளிப்படையாக அறிவித்திருந்தது. இதற்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் தீவிரவாதிகள் மீதும், தீவிரவாத அமைப்புகள் மீதும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று அமெரிக்காவும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலும் கடும் நெருக்கடி கொடுத்தன. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு, தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைக்காக வழங்கப்படும் நிதியையும் அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தீவிரவாதி ஹபீஸ் சயீது நடத்தி வந்த மருத்துவமனைகள், மதரஸாக்களுக்கு தடை விதித்து, அதை பாகிஸ்தான் அரசு கையகப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டியில் அமைந்துள்ள சுகாதார நிலையங்கள் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த சுகாதார நிலையங்கள் ஹபீஸ் சயீது தொடர்புடைய ஜமாத்-உத்-தவா நடத்தும் மருத்துவமனைகளாகும்.

இந்த நிலையில் ஹபீஸ் சயித்தின் ஜமாத் உத் தவா அமைப்பின் மீது விதிக்கப்பட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் தளர்த்த உள்ளதாகவும், ஜாமத் உத் தவா இயக்கத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பிரதமர் தயங்குவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜமாத் உத் தவா மீது நடவடிக்கை எடுத்தால் அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அச்சம் கொள்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து