முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: ஓசூரை சேர்ந்த புறா 750 கிலோ மீட்டர் தூரம் பறந்து சாதனை

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

தெலுங்கானா மாநிலம் கம்மரெட்டியில் புறா பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் தமிழகம் சேலம், ஓசூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து 63 புறாக்கள் பங்கு பெற்றன. ஓசூர் பகுதியை சேர்ந்த 31 புறாக்கள் இந்த பந்தயத்தில் கலந்து கொண்டன. இந்த புறாக்கள் கம்மரெட்டியிலிருந்து 750 கிமீ பந்தயத்தில் காலை 7 மணிக்கு பறக்க விடப்பட்டு மாலை 6.35 மணிக்கு ஓசூர் வந்தடைந்தது. புறா பந்தயத்தில் இது ஒரு சாதனையாகும். கடந்த வாரம் இதே புறா ஹைதரபாத்திலிருந்து 500 கிமீ பந்தயத்தில் பங்கேற்று 6 அரை மணி நேரத்தில் ஓசூரை வந்தடைந்தது. ஓசூரில் பந்தய புறாக்களை வளர்ப்போர் சங்கம் நடந்து வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் புறா பந்தயங்களில் இவர்கள் வளர்க்கும் புறாக்கள் பங்கு பெறுகின்றன. அடுத்த வாரம் ஆயிரம் கி.மீ பந்தயம் நடைபெற உள்ளது. ஓசூரை சேர்ந்த தனியார் கம்பெனியில் பணிபுறியும் தாண்டவமூர்த்தி என்பவர் பொழுது போக்கிற்காக ஹோமர் பந்தய புறாக்கள் வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் புறாக்கள் பந்தயங்களில் பங்கு பெறுகின்றன. தெலுங்கானவிலிருந்து பறக்க விடப்பட்ட புறாக்களில் இவர் வளர்த்த புறாக்கள் முதலாவதாகவும், இரண்டாவதாகவும் தொடர்ந்து வந்து சாதனை படைத்துள்ளது. இவரது புறாக்கள் பந்தயங்களில் வெற்றி பெற்று ஏராளமான கேடயங்களும், சான்றுகளும் பெற்றுள்ளது. இது குறித்து தாண்டவமூர்த்தி கூறும் போது : புறாக்களில் சதாப்புறா, மாடப்புறா, கர்ணாப்புறா, மயில் புறா, ஹோமர் புறா என பல வகைகள் உள்ளன, இவைகள் அனைத்தும் உள் நாட்டுப் புறாக்கள் எனது ஹோமர் இன புறா இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. இதுபோன்ற பறவை இனங்களை வளர்ப்பது மனதுக்கு இன்பம் தருவதாக உள்ளது. பறவைகள் வளர்ப்பதால் சுற்றுப்புற சூழலுக்கு உகந்தது. 50 க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறேன். நேற்று முதலாவதாக வந்த புறா என்னிடம் இருந்த புறா முட்டை இட்டு குஞ்சு பொறித்து நான் வளர்த்த புறா என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய அளவில் நடத்தும் போட்டிக்கு புறாக்களை தயார் படுத்தி வருகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து