முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: காவிரி பங்கீடு குறித்து பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

காவிரி பங்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைபடுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் சேலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சேலம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டங்கள் முடிவுபெற்ற இடங்களில் மாநகராட்சி சார்பில் 94.39 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டியும், 2.03 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகள் திறந்துவைத்தும், மற்றும் 116.37 கோடி ரூபாய் மதிப்பில் 391 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தொடரப்பட்ட வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் 6 வார காலத்திற்குள் மத்திய அரசு அமைத்து குடியரசு தலைவர் ஒப்புதல் பெறவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 15 ஆண்டுகலாம் இந்த தீர்ப்பு செல்லும் என்று அறிவித்துள்ளது. ஆகவே காவிரி பங்கீடு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். இதுவே இறுதியான தீர்ப்பு, இதை யாரும் மாற்ற முடியாது, மேலும், யாரும் மேல்முறையீடு செய்யமாட்டார்கள் என்று கருதுகிறேன் என்றார். தீர்ப்பின் அடிப்படையில்தான் மத்திய அரசு நடைமுறைபடுத்தும் என்று நம்புகிறோம். தேர்தல் நேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதில் ஒன்றான இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம். ஆண்டுதோறும் ஒரு லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்றார். பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாலேயே எடப்பாடி பழனிசாமி அணியில் தன்னை இணைத்துக்கொண்டதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, இது தொடர்பாக தனக்கு முழுமையாக தெரியாது என்று கூறினார் பேட்டி--எடப்பாடி பழனிசாமி--முதலமைச்சர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து