முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: ஓசூர் நகராட்சி ஜூஜூவாடியில் தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

தமிழகம்தான் இந்தியாவிலேயே உயர் கல்வியில் அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது. ஓசூரில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பேச்சு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நகராட்சி சார்பில் ஜூஜூவாடி பகுதியில் தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் பா. பாலகிருஷ்ணா ரெட்டி கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். முன்னதாக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசதந்தை மகாத்மாகாந்தி அடிகளின் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய அமைச்சர் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில்தான் கல்வித்துறையில் சிறந்து விளங்க எல்லா பயனுள்ள திட்டங்களும் செயலடுத்தப்பட்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் தமிழகம் குறிப்பாக உயர்கல்வியில் பிற மாநிலங்களை காட்டிலும் அதிகவளர்ச்சியடைந்துள்ளது. சராசரியாக பிற மாநிலங்களில் சுமார் 22 சதவீதம் அளவே உயர்கல்வி வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் தமிழகம் 44 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு காரணம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழகத்தின் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் மாணவர்களை சென்று அடைந்துள்ளது என்பது. மேலும் கல்வித்துறையில் மட்டுமில்லாமல் தொடர்ந்து தற்போதய அரசு விளையாட்டுதுறையிலும் நல்ல பல திட்டங்களை தந்து சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற எண்ணற்ற நல்ல திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்படும் என உறுதியளிப்பதாக பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து