முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையாள நடிகை பிரியா வாரியர் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      சினிமா
Image Unavailable

புது டெல்லி, மலையாள நடிகை பிரியா வாரியர் தன் மீதும், படத் தயாரிப்பாளர்கள் மீதும் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மலையாளத்தில் இயக்குநர் உமர் அப்துல் வகாப் இயக்கத்தில், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள திரைப்படம் ஒரு அடார் லவ். இந்த திரைப்படத்தில் வரும் பாடலான மணிக்கய மலரய பூவே என்ற பாடல் முஸ்லிம் சமூகத்தின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தையும், அவரின் மனைவி கதீஜா ஆகியோருக்கும் அவதாறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக, ஐதராபாத், மும்பை, அவுரங்காபாத் ஆகிய காவல் நிலையங்களில் முஸ்லீம் அமைப்புகளால் புகார் செய்யப்பட்டது. போலீஸார் நடிகை பிரியா பிரகாஷ், இயக்குநர் உமர் அப்துல் வகாப், தயாரிப்பாளர் ஜோசப் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த முதல் தகவல் அறிக்கையை ர த்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் நடிகை பிரியா பிரகாஷ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கடந்த 1978-ம் ஆண்டு மலபார் பகுதியில் உள்ள கவிஞர் பிஎம்ஏ ஜாபர் என்பவரால் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை புகழ்ந்து எழுதப்பட்ட நாட்டுபுறப்பாடலாகும். கடந்த 40 ஆண்டுகளாக இந்த பாடல் பாடப்பட்டு வரும் நிலையில் அப்போது புகார் தெரிவிக்காத அமைப்புகள் இப்போது இறைத்தூதரையும், அவரின் மனைவியையும் நாங்கள் அவதிப்பதாக புகார் தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற அடிப்படை ஆதரமற்ற புகார் மீது தெரிவிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும், பேச்சுரிமை, கருத்துரிமை சுதந்திரத்தை காக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வாலிகர், டி.ஓய். சந்திரசூட் ஆகியோர் இன்று விசாரிக்கவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து