முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி பிரதமராக இருக்கத் தகுதியற்றவராம்: சித்தராமையா

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர், நரேந்திர மோடி பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

மோடியின் பேச்சுகள் ஒரு பிரதமர் பேசத்தக்கதாக இல்லை. கர்நாடகாவிலும் சரி ஒட்டுமொத்த இந்தியாவிலும் சரி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், பிரதமர் அதைப்பற்றியெல்லாம் வாய் திறந்து பேசுவதில்லை. - சித்தராமையா

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, மோடியின் பேச்சுகள் ஒரு பிரதமர் பேசத்தக்கதாக இல்லை. கர்நாடகாவிலும் சரி ஒட்டுமொத்த இந்தியாவிலும் சரி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், பிரதமர் அதைப்பற்றியெல்லாம் வாய் திறந்து பேசுவதில்லை. அரசியல் ரீதியாக மட்டுமே பேசுகிறார். பொறுப்பற்ற அறிக்கைகளை விடுக்கிறார். அவர் பிரதமராக இருக்கவே தகுதியற்றவர் என்றார்.

முன்னதாக, மோடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஊழலில் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெளியேறும் காலம் நெருங்கி விட்டது என விமர்சித்திருந்தார். இந்நிலையில், நேற்று சித்தராமையா, பிரதமராக இருக்கவே மோடி தகுதியற்றவர் என பதிலடி கொடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து