முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னணி வீரர்கள் காயம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி எதிர்கொள்வதில் சிக்கல்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

காயத்தால் அவதிப்பட்டும் வரும் டு பிளிசிஸ், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பது கடினம் எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த அணி டெஸ்ட் தொடரை எதிர்கொள்வதில் சிரமப்படும் என்றே தெரிகிறது.

டெஸ்ட் தொடர்...

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 1-ந்தேதி டர்பனில் தொடங்குகிறது.

ஸ்டெயின் விலகல்...

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு டேல் ஸ்டெயின் தயாராகியிருந்தார். முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் பந்து வீசினார். ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அத்துடன் வெளியேறினார். 2-வது இன்னிங்சில் பந்து வீச வரவில்லை. தோள்பட்டை காயம் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகள் விளையாடமல் இருந்து ஸ்டெயின் கேப்டவுன் டெஸ்டில்தான் களம் இறங்கினார். ஒரு போட்டியில் கூட முழுமையாக விளையாடாமல் வெளியேறினார். அவரது காயம் குணமடைய மார்ச் மாதம் 20-ந்தேதிக்கு மேல் ஆகும் எனக்கூறப்படுகிறது.

டி வில்லியர்ஸ்க்கு காயம்

ஜோகன்னஸ்பா்க்கில் நடைபெற்ற கடைசி டெஸ்டின்போது டி வில்லியர்ஸ்க்கு காயம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. கேப்டன் டு பிளிசிஸ் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். விராட் கோலி அடித்த பந்தை பிடிக்க முயற்சி செய்யும்போது கைவிரலில் காயம் ஏற்பட்டது டு பிளிசிஸ் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் 4 வாரம் முதல் 6 வாரம் வரை ஓய்வு தேவை என்று கூறப்பட்டது. 2-வது டெஸ்டிற்குப் பிறகு இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால் இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். காயத்தில் இருந்து மீண்டு டி வில்லியர்ஸ் டி20யில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கால் மூட்டில் ஏற்பட்ட காயத்தால் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

பவுமா காயம்...

பேட்ஸ்மேன் ஆன பவுமா மோதிர விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்தியாவிற்கு எதிராகவே கடும் சிரமத்திற்கு உள்ளான தென்ஆப்பிரிக்கா அணிக்கு, ஆஸ்திரேலியா தொடர் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னணி வீரர்கள் காயம் தென்ஆப்பிரிக்கா அணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐந்து பேரில் டி காக், ஏபி டி வில்லியர்ஸ் 1-ந்தேதிக்குள் உடற்தகுதி பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது. ஆனால், டு பிளிசிஸ், ஸ்டெயின் ஆகியோர் உடற்தகுதி பெறுவது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது. இதனால் வீரர்கள் காயம் தென்ஆப்பிரிக்கா அணிக்கு நெறுக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவின் மெடிக்கல் கமிட்டி டு பிளிசிஸ், டி காக், பிலாண்டர் முதல் டெஸ்டிற்கு முன் உடற்தகுதி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து