வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி கலெக்டர் சி.அ.ராமன் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      வேலூர்
ph vlr a

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை கலெக்டர் சி.அ.ராமன், குத்விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கண்காட்சி

பின்னர் வேலைவாய்ப்பு குறித்த கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற முதல் மூன்று மாணவிகளுக்கு பரிசுகளை வழிங்கி கலெக்டர் பேசியதாவது:- நம்முடைய பாரதநாடு பன்முகதன்மை கொண்ட ஒரு துணைகண்டமாகும். இந்தியா சுதந்திரமடைந்த பின்பு 50 சதவீத பகுதிகள் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. மன்னராட்சி நடைபெற்ற சமஸ்தானங்கள் பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டு உருவானதே முழு இந்தியா. நம்முடைய நாட்டில் வேலைவாய்ப்பு என்பது படித்த இளைஞர்களுக்கு ஒரு பெரிய சவாலான ஒன்று. படித்து முடித்தவுடன் நாம் நம்முடைய தனித்திறனை வளர்த்துக்கொண்டால் உடனடியாக வேலைவாய்ப்பினை பெறலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. நாம் நம்முடைய தனித்திறனை வளர்த்துக்கொண்டு போட்டித் தேர்வுகளில் கலந்துக் கொண்டு சிறந்த வேலைவாய்ப்பினை பெற வேண்டும்.

கண்டுபிடிப்பு

 

உலகில் உள்ள உயிரினங்களில் மனித இனத்தால் மட்டுமே தான் நினைத்ததை ஒவ்வொரு காலகட்டத்திலும் செய்யக்கூடிய தனித்திறன் உள்ளது. இதை நாம் உணர்ந்து தனித்திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே நம்முடைய இலக்கை அடைய முடியும். உதாரணமாக தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளி சென்றது குறுகிய காலம். ஆனால் அவருடைய கண்டுபிடிப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளது. அதற்கு காரணம் அவருடைய விடா முயற்சி, தன்னம்பிக்கையே ஆகும். அரசுத் துறையின் சார்பில் வேலைவாய்ப்பினை உருவாக்க பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கு பெறும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. அடுத்த நிலைகளில் தங்களின் வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும். இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலர்கள் வழங்கும் கருத்தினை பெற்று தங்களது தனித்திறனை வளர்த்துக்கொண்டு மென்மேலும் வளர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்கள் (வேலை வாய்ப்பு) மு.சந்திரன் (சென்னை), ஆர்.அருணகிரி (காஞ்சிபுரம்), டி.கே.எம். கல்லூரி செயலர் மணிநாதன், முதல்வர் முனைவர்.பி.என்.சுதா, முனைவர்.ஆ.சுடர்விழி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தேவராஜ், மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

 

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து