மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.38.37 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தூத்துக்குடி

மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.38.37 கோடி பயிர்க்காப்பீட்டுத் தொகை வந்துள்ளதாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்.

பயிர்க்காப்பீட்டுத் தொகை

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு 2016-17ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை வந்துள்ளது. இதில், நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு 3வது கட்டமாக ரூ.75 லட்சம் வந்துள்ளது.  931 விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும். மேலும், மக்காச்சோளம் பயிரிட்ட 11,352 பேருக்கு ரூ.38.37 கோடியும், பாசிப்பயறு பயிரிட்ட 9895பேருக்கு ரூ.20.73 கோடியும் காப்பீட்டுத் தொகை வந்துள்து. இந்த காப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தமிழக முதல்வர் வருகிற 25ம் தேதி கோவில்பட்டி வருகிறார். அங்கு ரூ.81.82கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 3வது பைப்லைன் திட்டத்தை துவக்கி வைக்கிறார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,  புதிய திட்டங்களை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இவ்வாறு ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து