முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிளகாய் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் சாகுபடி மேம்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாமினை கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
         ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், கமுதி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் தலைமையில், தமிழ்நாடு வேளாண்மைத்துறை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்;தின் கீழ் செயல்பட்டு வரும் ஈரோடு நறுமனப்பொருள் மேம்பாட்டு நிறுவனம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த, மிளகாய் சாகுபடி மேம்பாடு குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கினை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பிரதான பயிரான நெல்லுக்கு அடுத்தபடியாக, மிளகாய் பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்வதானால், தமிழ்நாட்டின் மொத்த மிளகாய் சாகுபடி பரப்பான 56,442 ஹெக்டரில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 21,217 ஹெக்டர் (38மூ) பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் சுமார் 17,500 ஹெக்டர் பரப்பில் ராமநாதபுரம் முன்டு என்ற உள்@ர் ரகம் மானாவாரி பயிராகவும், சுமார் 2,500 ஹெக்டர் பரப்பில் சம்பா ரகம் கமுதி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இறவைப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது.
           ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்டு ரகம் மட்டும் 90மூ பரப்பில் மானாவரியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கமுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் குறைந்த நீர் ஆதாரங்களை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் அமைத்து உயர் விளைச்சல் வீரிய ஒட்டுரக மிளகாய் சகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாய்களுக்கு தேசிய தோட்டக்களை இயக்க திட்டத்தின் மூலம் நல்ல தரமான வீரிய ஒட்டுரக மிளகாய் நாற்றுகள் அரசு தோட்டக்களை பன்னைகளில் குளித்தட்டு முறையில் நாற்றுகள் உற்றபத்தி செய்து வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் மூலம் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பன்னை குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் அதிக விளைச்சல் தரும் வீரிய ஒட்டுரக மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்;தின் கீழ் செயல்பட்டு வரும் ஈரோடு நறுமனப்பொருள் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக, மிளகாய் சாகுபடியில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டும் முறைகள் மற்றும் சந்தைபடுத்துதல் குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
 வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டு செய்வதன் மூலம் விவசாயிகள் அதிகளவில் லாபம் பெறலாம். உதாரணமாக மிளகாயினை, மிளகாயாக விற்பனை செய்வதை விட மிளகாய் பொடியாக சிறியளவில் மதிப்புக்கூட்டு செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம். இப்பயிற்சி கருத்தரங்கினை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மளகாய் மதிப்பு கூட்டும் வகையில் மிளகாய் எண்ணெய் எடுத்தல், மிளகாய் பொடி மற்றும் சாம்பார் பொடி தயாரிப்பது போன்ற தொழில்களை ஊக்குவிப்பதற்கு மாவட்ட தொழில் மையம் மூலமாகவும், மற்றும் வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.  இத்தகைய திட்டங்களையும் விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, ஈரோடு நறுமனப்பொருள் மேம்பாட்டு நிறுவன துணை இயக்குநர் எஸ்.நல்லகண்ணு, தோட்டக்கலை துணை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குநர் கார்த்திகேயன், மதுரை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.ஜெ.ஜெயராஜ் உட்பட அரசு அலுவலர்கள்,விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து