நெல்லை அரசு மருத்துவமனையில் ரூ.5.74 கோடி மதிப்பீட்டிலான நவீன கேத் லேப் மற்றும் சிடி ஸ்கேன் கருவிகள்காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்த வைத்தார்

திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3,16,15,000- மதிப்பிலான நவீன இருதய சிகிச்சை கேத் லேப் மற்றும் ரூ.2,58,22,456- மதிப்பிலான நவீன 16 இயந்திரம் என மொத்தம் ரூ.5.74 கோடி மதிப்பீட்டிலான நவீன மருத்துவ உபகரணங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்காக காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நவீன மருத்துவ உபகரணங்கள்
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் சந்தீப் நந்தூரி, குத்து விளக்கேற்றி, நவீன 16 அமைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் நவீன இருதய சிகிச்சைக்கான கேத்லேப் ஆகிய பகுதிகளை பார்iவியட்டார். பின்னர், கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3,16,15,000- மதிப்பிலான நவீன இருதய சிகிச்சை கேத் லேப் மற்றும் ரூ.2,58,22,456- மதிப்பிலான நவீன 16 ளுடiஉந ஊகூ ளுஉயn இயந்திரம் ஆகிய இரண்டு நவீன மருத்துவ உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்துள்ளார்கள். தென் மாவட்டங்களில் திருநெல்வேலியில் திறக்கப்பட்டுள்ள ஊகூ ளுஉயn இயந்திரம் தான் மிகவும் நவீனமானது. மேலும், மாரடைப்பு சிகிச்சைக்காக உயர் அவசர சிகிக்சை அளிக்கும் கேத் லேப் இன்று இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருதய ரத்த நாள அடைப்புகளை கண்டறிய முடியும். இதன் மூலம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்த நவீன கருவிகளை வழங்கிய, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும், சுகாதாரத் துறை செயலாளர் அவர்களுக்கும் எனது சார்பாகவும், திருநெல்வேலி மாவட்ட மக்களின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கண்ணன், துணை முதல்வர் மரு.ரேவதிபாலன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.செந்தில்குமார், மாநகர நகர்நல அலுவலர் மரு.பொற்செல்வன், முன்னாள் முதல்வர் மரு.சித்தி அத்திய முனவரா, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ரவிச்சந்திரன், இதயவியல் துணைத் தலைவர் மரு.ரவிச்சந்திரன் எட்வீன், உள் தங்கும் மருத்துவ அலுவலர் (சுஆடீ) மரு.ஷியாம்சுந்தர்சிங் முக்கிய பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.