15 ஆண்டுகளாக சொத்து வரி கட்டவில்லையாம்! நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி மீண்டும் நோட்டீஸ்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      சினிமா
ramki 2018 02 21

சென்னை,  15 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாததால் நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராம்கி 1980களில் சினிமாத் துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார். இளம் பெண்களின் கனவு நாயகனாகவும் இருந்தவர் நடிகர் ராம்கி. நடிகை நிரோஷாவை திருமணம் செய்து கொண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக இந்த வீட்டிற்கு சொத்துவரி செலுத்தவில்லை என்று பல முறை சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும் ராம்கி சொத்து வரி செலுத்தவில்லை, இதனால் சென்னை மாநகராட்சி நடிகர் ராம்கிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் சொத்து வரியை கட்டவில்லை என்றால் வீடு ஜப்தி செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரபல நடிகருக்கு சென்னை மாநகராட்சி சொத்து வரி கட்டவில்லை என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து