முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோவில் முதலீட்டாளர்கள் மாநாடு : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ : பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள நேற்று காலை லக்னோவிற்கு வருகை புரிந்தார். அவர், வருகையையொட்டி லக்னோ விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்ட்டினை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ரவி ஷங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, பியுஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, சுபாஷ் சந்திரா, என்.சந்திரசேகரன், ஆனந்த் மஹிந்திரா, குமார் மங்கலம் பிர்லா மற்றும் ஷோபனா கமினெனி உள்ளிட்ட பல முக்கிய தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் ரூ .35,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இரண்டு நாள் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,000 க்கும் அதிகமான பிரதிநிதிகள் மொரிஷியஸ், ஜப்பான், நெதர்லாந்து, பின்லாந்து, செக் குடியரசு, தாய்லாந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் இருந்து பங்கேற்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து