முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில்நடந்தது

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்களுடனான ஆய்வுக்  கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் 2018-2019 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கையினை கையேட்டினை  கலெக்டர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-  தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் 2018-2019 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கி கிளைகளின் மூலம் வளம் சார்ந்த கடன் வழங்குவதற்காக ரூபாய் 3782.89 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த இலக்கானது நடப்பு 2017-2018 ஆம் ஆண்டு இலக்கை விட 9.2 சதவிகிதம் அதிகமாகும்.
 வெளியிடப்பட்ட வருடாந்திர கடன் திட்ட வரைவின்படி,  ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 2018-19ஆம் ஆண்டில் வேளாண் கடன் உதவிகள் வழங்கிட ஏதுவாக ரூ.1618.22  கோடியும், வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணைத் தொழில்களுக்கு கடனுதவிகள் வழங்கிட ரூ.604.20 கோடியும், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக ரூ.168.05 கோடியும், விவசாய கட்டமைப்புகளுக்காக ரூ.86.50 கோடியும்,  உணவு பதப்படுத்துவதற்கு ரூ.127.08 கோடியும்,  ஏற்றுமதி திட்டங்களுக்காக ரூ.42.00 கோடியும், கல்வி வளர்ச்சிக்காக ரூ.360.00 கோடியும்,  வீடு கட்டுவதற்கு ரூ.372.00 கோடியும்,   மீள்சக்திக்கு  ரூ.20.21 கோடியும், சமூக உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.47.03 கோடியும், இதர முன்னோடி திட்டங்களுக்காக ரூ.337.60 கோடியும் ஆக மொத்தம் ரூ.3782.89 கோடி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு வரைவு திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த திட்டமானது தேசியகொள்கைகளான ‘எல்லா நிலத்திற்கும் நீh”; மற்றும் ‘ஒரு சொட்டு நீர், பல கட்டு பயிர்” என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.
 இக்கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி,   நபார்டு வங்கி மேலாளர் எஸ்.மதியழகன், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உதவி பொது மேலாளர் ந.ஜெயசந்திரன், பாண்டியன் கிராம வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் தெய்வநாயகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், சியாமளாநாதன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ராமநாதபுரம் கிளை மேலாளர் குணசேகரன்;, உள்பட பல்வேறு  வங்கி கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து