முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் இழப்பீடு வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்- கொடைக்கானல் யுனிலிவர் பாதரச தெர்மாமீட்டர் தொழிற்சாலை நிர்வாகம் இழப்பீடு வழங்கக் கோரி முன்னாள் பணியாளர்கள் இரண்டாம் முறையாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
 கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்திருந்தது யுனிலிவர் பாதரச தெர்மாமீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை. இந்த தொழிற் சாலை கடந்த 2001 மார்ச் மாதத்தில் மூடப்பட்டது. இந்த தொழிற்ச்சாலையில் 1300க்கும் மேற்பட்ட தொழிளாளர்கள் பணிசெய்தனர். இவர்கள் இந்த பாதரச நச்சுத்தண்மையால் பலர் இறந்து போயுள்ளனர் பலர் பல விதமான நோய்களின் பிடியில் சிக்கிஉள்ளனர். பல அமைப்புகள் இந்த தொழிற்சாலையின் உள் பகுதியில் கொட்டப்பட்ட பாதரச கழிவுகளை உலக தரம் வாய்ந்த அளவில் சுத்தப்படுத்த வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதில் பணியாற்றிய 591 பணியாளர்களுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகை சுமார் 80 கோடி ரூபாய் வழங்கியது தொழிற்சாலை நிர்வாகம். மீதம் உள்ள தொழிளாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உள்ளிட்ட தொகைகள் இது வரை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து கொடைக்கானல் யுனிலிவர் தெர்மாமீட்டர் தயாரிப்பு பேக்கிங், கட்டிங், தோட்டம் பிரிவுகளின் முன்னாள் ஊழியர்கள் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நேற்று கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம்  முன்னர் இந்த சங்கத்தின் சார்பில் முன்னாள் பணியாளர்கள் சுமார் 750க்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் முறையாக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு இந்த சங்கத்தின் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல் வேறு அரசியல் கட்சியினை சேர்ந்தவர்கள், பல அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு இந்த போராட்டம் முடிந்தது. இந்த போராட்டத்தில் சங்கத்தின் வழக்கறிஞர்  துணைத் தலைவர் கணேஸ், துணைச் செயலாளர் வனராஜ், பொருளாளர் செந்தில் செயலாளர், செயற்குழு தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இது பற்றி இந்த சங்கத்தின் தலைவர் சேகர் கூறியது: எங்கள் சங்கத்தின் பணியாளர்கள் பல முறை பல விதமான அறப் போராட்ங்களை செய்து வருகின்றோம். ஏற்கனவே நாங்கள் இது போன்று உண்ணா விரதப் போராட்டம் செய்துள்ளோம் எங்களின் பணியாளர்களுக்கு உரிய இழப்பீட்டை தொழிற்சாலை நிர்வாகம் தரும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த உண்ணாவிரதப் போராட்டம் செய்ய பல தடைகள் ஏற்பட்டது. எங்களின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்கவில்லை எனில் இந்த போராட்டம் தொடர் போராட்டமாக அறிவிக்கப்படும். என்றார்.
பட விளக்கம்: கொடைக்கானலில் இழப்பீடு வழங்கக் கோரி நடந்த உண்ணாவிர போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாதரச பணியாளர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து