முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.12.65 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் பிரிவுக் கட்டிடம் உள்பட ரூ.12.65 கோடி மதிப்பிலான மருத்துவமனை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

தங்கு தடையின்றி...

ஏழை எளிய மக்களுக்கு, உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை தோற்றுவித்தல், எளிதில் செல்லமுடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகளை அளித்தல் போன்ற பல முன்னோடித் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

கோபிசெட்டிபாளையம்...

அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் பிரிவுக் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் 6 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 200 மாணவிகள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம்;

மதுரை - திருவாரூர் ...

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புறநோயாளிகள் பிரிவு, 24 படுக்கைகள் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் மற்றும் 12 படுக்கைகள் கொண்ட தலைக்காய மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், மதுரை மாவட்டம், வலையங்குளம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடம், தேனி மாவட்டம், குரங்கனி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் என மொத்தம், 12 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர்.ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் உமாநாத், ., மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமத், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் இன்பசேகரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து