முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பம்ப் ஸ்டாக்ஸ் துப்பாக்கி உதிரிபாகத்துக்குத் தடை அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கை

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: ‘‘பாதி தானியங்கி துப்பாக்கியை, முழு தானியங்கி துப்பாக்கியாக மாற்ற பயன்படுத்தப்படும் ‘பம்ப் ஸ்டாக்ஸ்’ என்ற உதிரி பாகத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 17 பேர் பலியாயினர். துப்பாக்கிச் சூடு நடத்திய பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாணவனைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கியால் சுடப்படும் சம்பவம் நடப்பதைக் கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் நேற்று பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

மேலும், துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையில் துப்பாக்கி களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து யோசனைகள் தெரிவிக்கும்படி அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸிடம், அதிபர் ட்ரம்ப் கேட்டிருந்தார். அப்போது பாதி தானியங்கி துப்பாக்கியை (செமி ஆட்டோமேட்டிக்), முழு தானியங்கி துப்பாக்கியாக மாற்றுவதற்கு, ‘பம்ப் ஸ்டாக்ஸ்’ என்ற உதிரிபாகத்தைப் பயன்படுத்துவது அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டது. அப்படி மாற்றப்படும் துப்பாக்கியால் ஒரு நிமிடத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை சுடமுடியும்.

இதையடுத்து பம்ப் ஸ்டாக்ஸ் உதிரிபாகத்துக்கு அதிபர் ட்ரம்ப் நேற்று தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து