முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர், அணுகுண்டுகளை சுமந்துச் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமையுடைய பிருத்வி-2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம், பாலசோர் அருகே உள்ள சண்டிப்பூரில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. பிருத்வி 2 இரவு நேரத்திலும் குறிப்பிட்ட இலக்கை அடையாளம் கண்டு துல்லியமாக தாக்கியது. இதையடுத்து ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை, 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 500 கிலோ முதல் 1,000 கிலோ எடை வரை அணுகுண்டுகள் உள்ளிட்ட வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் கடந்த 2003-ம் ஆண்டு இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து