முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்: இந்திய பக்தர்கள் சார்பில் காணிக்கையாக 40 அடி உயரம் தேக்குக் கொடிமரம்.

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,பிப்,23:  கச்சத்தீவில் இரண்டு நாட்கள் நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா இன்று மாலையில கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது.இந்த திருவிழாவில் பங்கேற்க இந்திய பகுதியிலிருந்து 2095 பக்தர்கள்  ராமேசுவரம் துறைமுகப்பகுதியிலிருந்து படகு மூலம் செல்ல உள்ளனர்..மேலும் தேவலயத்திற்கு ராமேசுவரம் பக்தர்கள் சார்பில் புதிய தேக்கு கொடிமரம் காணிக்கையாக செலுத்துவதால் அந்த கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் நேற்று படகில் ஏற்றி வைத்தனர்.மேலும் திருவிழாவிற்கு செல்லும்  பக்தர்களுக்கு  ராமேசுவரம் துறை முகப்பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும்,திருவிழா குழுவினரும் செய்து வருகின்றனர்.
  இந்திய,இலங்கை ஆகிய இருநாட்டை சேர்ந்த பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவிலுள்ள புனிதஅந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றப்படும் மரம் ராமேசுவரம் பகுதியிலிருந்து திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் சார்பில்  புதியதாக   40 அடி உயரமுள்ள தேக்கு கொடி மரத்தையும்,  இது தவிர சுமார் 4 அடி உயரம் உடைய புனித அந்தோணியார் சிலையும் நற்கருணை ஆசீர் வழங்கக்கூடிய கதிர் பாத்திரமும் காணிக்கையாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கச்சத்தீவு பயண ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளர் பங்குதந்தை அந்தோணிச்சாமி மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள், அனைத்துத்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் கொடிமரத்தை கச்சத்தீவிற்கு இன்று கொண்டு செல்வதற்காக கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து நேற்று படகில் பாதுகாப்பாக ஏற்றி வைத்தனர்.இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 62 விசைப்படகில் 2,098 பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் ராமேசுவரம் துறை முகப்பகுதியிலிருந்து  சுங்க இலாகா, வருவாய்த் துறையினர் மற்றும் மத்திய,மாநில போலீசார்கள் சோதனைக்கு பிறகு அவர்கள் இங்கிருந்து படகில் புறப்பட்டு செல்கின்றனர். அங்கு இந்திய பக்தர்களை இலங்கை கடற்படை அதிகாரிகளும்,இலங்கை திருவிழாக்குழுவினரும் வரவேற்கின்றனர். அதன் பின்னர் புனித அந்தோணியார் தேவலயத்தில்  இன்று மாலை 5 மணிக்கு திருவிழாவிக்கிற்கான கொடியேற்றம் நடைபெறும்.தொடர்ந்து இரவில் திருப்பலி பூஜைகளும், தேர் பவனி மற்றும் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. தொடர்ந்து நிகழ்ச்சியில் நாளை  காலையில் திருப்பலி பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிகழ்ச்சி முடிவடைகிறது. அதன் பின்னர் இந்திய இலங்கை பக்தர்கள் கலைந்து சென்று அவர் அவர்கள் நாட்டிற்கு திரும்புவார்கள். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இலங்கை மற்றும் தமிழக பகுதி சிவகங்கை மறைமாவட்ட ஆயர்களும்,ராமேசுவரம்,பாம்பன்,தங்கச்சிமடம் பங்குத்தந்தையர்களும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை  நடத்துகின்றனர். 
 கடலோரப்பகுதியில் பலத்த பாதுகாப்பு:
  திருவிழைவை மையப்படுத்தி சமுக விரோதிகள் இருநாட்டிற்கும் கலங்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.ஆதலால்  திருவிழாவையொட்டி தனுஸ்கோடி,கச்சத்தீவு கடல் பகுதியில் பாதுகாப்பு கறுதி மத்திய,மாநில அரசு உளவுப்பிரிவு போலீஸார்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வரிகின்றனர். மேலும் ராமேசுவரம்,மண்டபம்,பாம்பன் கடலோரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.  பாக்ஜலசந்தி,மன்னார் வளைகுடா கடலோரப்பகுதியில் மண்டபம் கடலோர காவல்படை போலீஸார்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.மேலும் திருவிழாவையொட்டி பாதுகாப்பு கறுதி ராமேசுவரம்,பாம்பன்.மண்டபம் ஆகிய பகுதி மீனவர்கள் இன்று பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை, தொடர்ந்து 5  நாட்களுக்கு மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ராமேசுவரம் மீன்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.இதனால் திருவிழாவிற்கு பக்தர்களை அழைத்து செல்லும் படகுகளை தவிர மற்ற படகுகளை மீனவர்கள் தனியாக கடலில் நிறுத்தி நங்கூரமிட்டு பாதுகாத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து