முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தனியார் பள்ளியில் விஷம் குடித்து 5 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்வம்: கலெக்டர் கொ.வீரராகவராவ் விசாரணை:

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள் 5பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ் நேரடி விசாரணை நடத்தினார்.
திருமங்கலம் நகரில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 14வயது நிரம்பிய மாணவிகள் 5பேர் ஆசிரியை திட்டியதால் வகுப்பறையிலே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.இதை தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்கப்பட்ட பெற்றோர்கள் உதவியுடன் பள்ளி நிர்வாகத்தினர் மாணவிகள் 5பேரையும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு மாணவிகள் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.ஆசிரியை திட்டியதால் மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் பள்ளி மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவிகளிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினார்.பின்னர் மாணவிகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் சிறப்புடன் செய்திடுமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.பின்னர் மாணவிகள் படித்த பள்ளிக்கு நேரில் சென்ற கலெக்டர் கொ.வீரராகவராவ்,பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியைகளிடம் விசாரணை மேற்கொண்டார்.அப்போது உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா,திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,திருமங்கலம் டி.எஸ்.பி.,ராமகிருஷ்ணன்,அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூமிநாதன் மற்றும் கல்வித்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.கலெக்டர் கொ.வீரராகவராவ் மற்றும் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து