தடம்மாறும் ஏர்செல் வாடிக்கையாளர்கள்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      வர்த்தகம்
Aircel

தமிழகம் முழுவதும் புதன் கிழமை தொடங்கிய ஏர்செல் வாடிக்கையாளர்களின் புலம்பல் இன்னும் தீரவில்லை. இதனால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாற விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை உள்பட இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாற விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே, ஏர்செல் நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் அசவுகரியத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் தற்போதைய சேவை குறைபாடு தற்காலிகமானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 4 நாட்களில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து