முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி குடோனில் பயங்கர தீவிபத்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பாலித்தீன் தார்ப்பாய்கள்,மரக்கட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் மின்வாரிய பேருந்து நிறுத்தம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்த வெளி குடோன் உள்ளது.இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மற்றும் தானியங்கள் லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்டு திறந்தவெளியில் அட்டியல் போட்டு சேமித்து வைக்கப்படுவது வழக்கம்.இங்கு சேமித்து வைக்கப்படுகின்ற நெல் மற்றும் தானியங்கள் அரவைக்காக கொண்டு செல்லப்படும் போது தானியங்களை மூடி வைத்திட பயன்படுத்தப்படும் பாலித்தீன் தார்ப்பாய்கள்,அட்டியல் போட உதவும் மரக்;கட்டைகள் மற்றும் வீணான நெற்பதர்கள் போன்ற அனைத்தும் குடோனின் காம்பவுண்டு சுவரையொட்டி சேமித்து வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் குடோனின் தெற்கு பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த வீணான நெற்பதர்களை சிலர் தீவைத்து எரித்துள்ளனர்.பின்னர் அதனை அவர்கள் அணைத்திடாமல் மறதியாகச் சென்றுள்ளனர்.இதனிடையே காற்று பலமாக வீசியதால் பதர்களில் பற்றியெரிந்து கொண்டிருந்த தீ மளமளவென்று பரவி அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் தார்ப்பாய்கள் மற்றும் மரக்கட்டைகள் எரிய ஆரம்பித்தது.பாலித்தீன் தார்ப்பாய்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அந்த பகுதி வானமண்டலம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.குடோனில் பணியில் இருந்தவர்கள் தீயை அணைத்திட மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் போகவே தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து திருமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் 3மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயணைப்பு படையினரின் மின்னல் வேக நடவடிக்கை காரணமாக அருகிலிருந்த துணை மின்நிலையம்,மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இதர கம்பெனிகளுக்கு தீ பரவிடாமல் தடுக்கப்பட்டது.இருப்பினும் இந்த தீ விபத்தில் பல லட்சம்மதிப்பிலான பாலித்தீன் தார்ப்பாய்கள்,மரக்கட்டைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்தது.மேலும் புகை மண்டலம் அதிகமாக காணப்;பட்டமால் மதுரை நோக்கிச் சென்றிடும் நான்குவழி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டது.வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரிய அளவில் புகை மண்டலத்துடன் தீப்பற்றி எரிந்ததை அவ்வழியே சென்ற நூற்றுக்கணக்கானோர் நான்கு வழிச்சாலையில் நின்று வேடிக்கை பார்த்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை போலீசார் உடனடியாக சீர்செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து