முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலாதலங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடம் விழிப்பப்புணர்வு ஏற்படுத்திட ஒரு நாள் சுற்றுலா தேனி கலெக்டர் வெங்கடாசலம், கொடியசைத்து துவக்கிவைத்தார்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      தேனி
Image Unavailable

      தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேனி மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலாதலங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் விழிப்;புணர்வு ஒரு நாள் சுற்றுலாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்  பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா பையினை வழங்கி;  ஒரு நாள் சுற்றுலாவினை கொடியசைத்து துவக்கிவைத்தார்.

ஒருநாள் சுற்றுலாவினை துவக்கிவைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்,
தமிழக அரசு சுற்றுலாத்துறையினை மேம்படுத்திடவும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், சுற்றுலாத்தலங்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், அணைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை பிற மாவட்ட மற்றும் மாநில மக்கள் தெரிந்துகொள்ளவும், பார்வையிடவும் ஏதுவாக இவைகளை பிரபலப்படுத்திட விளம்பர பலகைகள், கலைநிகழ்ச்சிகள், விழாக்கள், போன்றவற்றை நடத்தி வருகிறது, அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் உள்ள முக்கியத்தும் வாய்ந்த இடங்களை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள 10 அரசு பள்ளிகளை சேர்ந்த தலா 15 மாணாக்கர்கள் விதம் 150 மாணவ, மாணவியர்கள் ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலாவாக கர்னல் ஜான்பென்னிகுவிக் மணிமண்டபம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி திராட்சை விவசாயப் பகுதிகள், குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் மற்றும் வைகைஅணை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். சுற்றுலா செல்லும் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் கண்காணிப்பிற்காக உடன் செல்கின்றனர். மேலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவு, குடிநீர், பிஸ்கட் போன்ற வசதிகளும் எற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் உரிய பாதுகாப்புடன் அழைத்துச்சென்றுவர ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர்  .உமாதேவி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திருமதி.ஜெயலட்சுமி அவர்கள், சுற்றுலா உதவி அலுவலர்  பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்;டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து