முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை  கொடியேற்றத்துடன் துவங்கியது..இரண்டு நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் இந்திய,இலங்கை பகுதிகளை சேர்ந்த 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருப்பலி பூஜையில் பங்கேற்றனர்.
 ராமேசுவரத்திலிருந்து 18 மைல் நாட்டிக்கல் தூரத்தில் இந்திய,இலங்கை  கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. கச்சத்தீவில் அமைந்துள்ளது புனித அந்தோணியார் கோயில் திருவிழாவை வருடந்தோரும் இருநாட்டு மக்களும் இணைந்து பாராம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.இந்த வருடத்திற்காண கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில்  கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் இந்திய பகுதியிலிருந்து 1920 பக்தர்களும் .இலங்கை யாழ்பாணம்,கொழும்பு நெடுந்தீவு ஆகிய பகுதிகளிலிருந்து 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.  திருவிழாவில் தொடர்ந்து புனித அந்தோணியார் தேவாலயத்தில் ராமேசுவரம் வேர்க்காடு பங்கு தந்தை அந்தோணிசாமி  தலைமையில்  நெடுந்தீவு  பேராயர் எமில்பால் தேவாலயம் முன்பு  இந்திய பக்தர்கள் சார்பில் சுமார் 2 லட்சம் மதிப்பில் 40 அடி உயரத்தில் வழங்கப்பட்ட  தேக்கு கொடிமரத்தில் கொடியேற்றி திருவிழாவில் துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து கோயிலில் திருப்பலி பூஜைகளும்,தேர்பவனியும் நடைபெற்றது.இரவு முழுவதும் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூஜைகளில் பக்தர்கள் கலந்து மெழுகுவர்த்தி விளக்கேற்றி புனித அந்தோணியாரை தரிசித்தனர்.மேலும் இன்று சனிக்கிழமை அதிகாலையில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்று தொடர்ந்து கொடியுறக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து