பஞ்சாப் நேஷ்னல் வங்கி வாயிலில் மலர் வளையம் வைத்து புதுச்சேரி இளைஞர் காங்கிரசார் நூதன போராட்டம்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      புதுச்சேரி

பஞ்சாப நேஷ்னல் வங்கிக்கு இளைஞர் காங்கிரசார் மலர் வளையம் வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.

நூதன போராட்டம்

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் தொழில் அதிபர் நிரவ் மோடி ரூ.11500 கோடி மோசடி செய்துள்ளார். மோசடி செய்த தொழில் அதிபர் மீது மத்திய பாரதிய ஜனதா அரசும்,பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க வில்லை என காங்கிரசார் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் சாலையில் உள்ள பஞ்சாப்  நேஷ்னல் வங்கி கிளை முன்பு மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி போராட்டம் நடத்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமையில் இளைஞர் காங்கிரசார் காமராஜர் சாலையில் ஒன்று கூடினர்.  அங்கிருந்து பேண்டு வாத்தியங்களுடன் மலர் வளையத்தை எடுத்துக் கொண்டு பஞ்சாப் வங்கியை நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் காமராஜர் சாலையில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி அருகில் வந்ததும் போலீசார் ஊர்வலத்தினரை தடுத்து நிறுத்தினர். ஆனால் இளைஞர் காங்கிரசார் போலீசாரை நெட்டி தள்ளிக் கொண்டு வங்கியின் நுழைவு வாயில்கதவை இழுத்து மூடினர். பின்னர் நுழைவு வாயில் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.  மாநில துணை தலைவர் சரவணன், பொதுச் செயலாளர்கள் ராஜாராமன், சத்திய வேந்தன், முத்துக்குமாரசாமி, கோபால மூர்த்தி, செந்தில்குமார், தொகுதி தலைவர்கள் லட்சுமணன், புஷ்பராஜ், லோகையன், ஆண்டனி ஜோசப், பிரபு, உப்பளம் தொகுதி பொதுச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சாம்ராஜ், தனுசு, கருணாநிதி, காமராஜர் நகர் வட்டார செயலாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து