முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் பயங்கரவாதிகள் தாக்குதல்களில் 23 பேர் பலி

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

18 ராணுவ வீரர்கள்...
ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்றிரவு தாலிபன் பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று காலை சுமார் 8:30 மணியளவில் காபுல் நகரில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த தாக்குலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

2 கார் வெடிகுண்டு...
ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இரண்டு கார் வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாலிபன் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று நடைபெற்ற தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து