முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் வங்கியில் பண மோசடி செய்த நீரவ் மோடிக்கு சொந்தமான மேலும் ரூ. 523 கோடி சொத்துகள் பறிமுதல்

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ரூ. 11,400 கோடி வங்கி பணத்தை மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், சி.பி.ஐ., அமலாக்க பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நீரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதே போல் 141 வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

9 சொகுசு கார்கள்
நீரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று ரூ. 94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. 9 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ‘மெகா மோசடி’ தொடர்பாக நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

பிரம்மாண்ட மாளிகை
மும்பை வோர்லி பகுதியில் கடற்கரை ஓரத்தில் உள்ள சமுத்ரா மஹால் அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று வீடுகளை இணைத்து கட்டியுள்ள 81.16 கோடி ரூபாய் மதிப்பிலான பிரமாண்ட மாளிகை, அதே அடுக்ககத்தில் 15.45 கோடி மதிப்பிலான தனி வீடு,  புனே நகரில் உள்ள 6 வீட்டு மனைகள், 10 அலுவலகங்கள், 2 அடுக்குமாடி வீடுகள், சூரிய ஒளி மின்சார உற்பத்தி அலகு, அலிபாக் பகுதியில் ஒரு பண்ணை வீடு மற்றும் அகமதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட கர்ஜத் பகுதியில் 135 ஏக்கர் நிலம் உள்பட 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறையினர் நேற்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து